அப்போலோவில் கேரள முன்னாள் முதல்வர் உம்மண் சாண்டி | Former kerala cm umman chandi visited apollo hospital

வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (23/10/2016)

கடைசி தொடர்பு:14:50 (23/10/2016)

அப்போலோவில் கேரள முன்னாள் முதல்வர் உம்மண் சாண்டி

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மண் சாண்டி இன்று அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஜெ., உடல்நிலை குறித்து கேட்டறிய ஏற்கெனவே தற்போதைய கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அம்மாநில ஆளுநர் சதாசிவம் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உம்மண் சாண்டி, "முதல்வர் உடல்நிலை குறித்து அமைச்சர்களிடம் கேட்டறிந்தேன். அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்கள்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க