வெளியிடப்பட்ட நேரம்: 10:42 (25/10/2016)

கடைசி தொடர்பு:11:00 (25/10/2016)

இதனால்தான் அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்தோம்: விசிக ரவிக்குமார் விளக்கம்

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக இன்று கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணித்தது ஏன் என்பது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ரவிகுமார் விளக்கம் அளித்தார்.

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அனைத்துக்கட்சிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். இந்த கூட்டத்தை பாஜக, மக்கள் நலக்கூட்டியக்கம், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அனைத்துக்கட்சி கூட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணித்தது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் விளக்கம் அளித்துள்ளார். "திமுக கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்றால் அணிமாறியதாக கருத நேரிடும். மக்கள் நலக்கூட்டணி விடுதலை சிறுத்தைகள் கட்சியால் உடைந்தது என்ற அவப்பெயர் ஏற்படாமல் தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க