வெளியிடப்பட்ட நேரம்: 11:54 (26/10/2016)

கடைசி தொடர்பு:15:32 (26/10/2016)

உடும்பு ரத்தத்தை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் இளைஞர்கள்! (அதிர்ச்சி வீடியோ)

தமிழகத்தில் இளைஞர்கள் உடும்பு ரத்தத்தைக் குடிப்பது அதிகரித்து வருகிறது. உடலுக்கு நல்லது என்ற நினைத்து உடும்பு ரத்தத்தை குடிக்கின்றனர். அண்மையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளைஞர்கள் சிலர் உடும்பு ரத்தத்தை வாங்கி  பச்சையாக சோடா கலந்து குடிக்கும் வீடியோ வெளியாகி வைரல் ஆகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பழவேந்தாங்கலில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

                             

இதையடுத்து தமிழ்நாடு வனத்துறை அலெர்ட் ஆகியுள்ளது. சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் உடும்பு என அழைக்கப்படும் பெரிய ரக பல்லிகள் பாதுகாக்கப்பட்ட வனவிலங்ககுள் பட்டியலில் சேர்ந்தவை. எனவே உடும்புகளைக் கொல்வது சட்டத்துக்குப் புறம்பானது என சென்னை வனத்துறை வார்டன் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.

 உடும்பு ரத்தம் பல்வேறு நோய்களை குணப்படுத்துவதாகவும் உடல் தசைகளை வலுவாக்குவதாகவும் கூறி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் உடும்பு ரத்தம் மற்றும் கறியை விற்று வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. எனினும் உடும்பு ரத்தத்தை குடிப்பது போன்ற வீடியோ வெளியாகியிருப்பது இதுவே முதன்முறை. வீடியோவைப் பார்த்து பலரும் இதுபோன்ற செயலில் ஈடுபட ஆரம்பித்து விடக் கூடாது என்பதால் வனத்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.

- எம். குமரேசன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்