பூஜையில் புகுந்த தேனீக்கள்... அலறி ஓடிய அதிமுக எம்எல்ஏ 

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி ஆம்பூர் எம்எல்ஏ பாலசுப்ரமணி தலைமையில் நடந்த பூஜையில் தேனீக்கள் புகுந்தது. இதில் எம்எல்ஏ உட்பட 25 பேரை தேனீக்கள் கொட்டியதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி அமைசர்களும், தொண்டர்களும் பூஜை, பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், ஆம்பூர் எம்.எல்.ஏ. பாலசுப்ரமணி தலைமையில் இன்று கோயிலில் பூஜை நடைபெற்றது. அப்போது, அங்கிருந்த தேனீக்கள் கூட்டம் எம்எல்ஏ மற்றும் தொண்டர்களை சரமாரியாக கொட்டியது. படுகாயம் அடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சுமன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!