ஜெயலலிதா வாழ்க்கை போராட்டங்களால் சூழப்பட்ட ஒன்று!' அப்போலோவுக்குப் பின் வைரமுத்து

               

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா போராட்டங்களால் சூழப்பட்ட வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். இப்போது உடல் நலப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதிலிருந்தும் அவர் மீண்டு வருவார் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க கவிஞர் வைரமுத்து, பேராசியர். ஒளவை. நடராஜன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் இன்று வந்திருந்தனர். நண்பகல் 12.35 மணிக்கு அப்போலோ வளாகம் உள்ளே சென்ற அவர்கள், பதினைந்து நிமிடங்களில் வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் போராட்டங்களால் சூழப்பட்ட வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். அவருடைய தனி வாழ்வு, கலை வாழ்வு, அரசியல் வாழ்வு, எல்லாமே போராட்டங்கள் நிறைந்தது.

அதிலிருந்து மீண்டு வந்ததுதான் அவரது வாழ்வு. இப்போது உடல் நல போராட்டத்தில் அவர் ஈடுபட்டிருக்கிறார். மருத்துவ பலம், மனோ பலம், இரண்டினாலும் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையை நண்பர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அவர்கள் முழு நலம் பெறவேண்டும் நாங்கள் பெரிதும் விரும்புகிறோம். வாழ்த்துகிறோம்" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!