பொது சிவில் சட்டத்துக்கு குஷ்பு ஆதரவு.. திருநாவுக்கரசர் எதிர்ப்பு  | Khushboo voices support for Uniform Civil Code, Tirunavukkarasar opposes it

வெளியிடப்பட்ட நேரம்: 11:08 (31/10/2016)

கடைசி தொடர்பு:12:04 (31/10/2016)

பொது சிவில் சட்டத்துக்கு குஷ்பு ஆதரவு.. திருநாவுக்கரசர் எதிர்ப்பு 

மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த குஷ்பு, பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசரிடம், குஷ்பு தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த திருநாவுக்கரசர், பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. குஷ்பு ஆதரிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க