Published:Updated:

`சீட் தராததால் தனியாக நின்றேன்!' - தேர்தலில் சுயேச்சையாக வென்ற 71 வயது பாட்டி

சுப்புலட்சுமி

``நாட்டின் முதல் பிரதமர் நேருவும், காமராஜரும் எங்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். அந்தப் பாரம்பர்யத்தில் வந்தவர் என்பதால், தொடர்ச்சியாக எனது வார்டு மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து நன்மதிப்பைப் பெற்றிருந்தேன்."

`சீட் தராததால் தனியாக நின்றேன்!' - தேர்தலில் சுயேச்சையாக வென்ற 71 வயது பாட்டி

``நாட்டின் முதல் பிரதமர் நேருவும், காமராஜரும் எங்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். அந்தப் பாரம்பர்யத்தில் வந்தவர் என்பதால், தொடர்ச்சியாக எனது வார்டு மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து நன்மதிப்பைப் பெற்றிருந்தேன்."

Published:Updated:
சுப்புலட்சுமி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் 50 சதவிகிதம் பெண்கள் போட்டியிட்டனர். மேலும், மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளுக்கு மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.

அதன்படி, தேனி-அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகளுக்கான கவுன்சிலர் தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் மேரிமாதா பள்ளியில் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், 2-வது வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான 71 வயது பாட்டி சுப்புலட்சுமி வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற சுப்புலட்சுமி
வெற்றி பெற்ற சுப்புலட்சுமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவருக்கு போட்டியாக அ.தி.மு.க சார்பில் மைனாவதி, தி.மு.க சார்பில் அபிராமி, பா.ஜ.க சார்பில் சித்ரா, அ.ம.மு.க சார்பில் மேனகா மற்றும் சுயேச்சை வேட்பாளர் சுமங்கலி ஆகியோர் போட்டியிட்டனர்.

சுப்புலட்சுமி ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு 3 முறை கவுன்சிலராக இருந்தவர். இந்த முறையும் 2-வது வார்டில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சியினர் இருந்தனர். ஆனால் 2-வது வார்டு தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த சுப்புலட்சுமி தரப்பினர் சுயேச்சையாகப் போட்டியிட முடிவெடுத்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன்படி சுயேச்சையாகப் போட்டியிட்ட சுப்புலட்சுமி 777 வாக்குகளும், அ.தி.மு.க வேட்பாளர் மைனாவதி 538 வாக்குகளும், தி.மு.க வேட்பாளர் அபிராமி 482 வாக்குகளும், அ.ம.மு.க வேட்பாளர் மேனகா 36 வாக்குகளும், பா.ஜ.க வேட்பாளர் சித்ரா 8 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் சுமங்கலி 370 வாக்குகளும் பெற்றனர். இதில் சுயேச்சை வேட்பாளரான சுப்புலட்சுமி 239 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சுயேட்சை வேட்பாளர்
சுயேட்சை வேட்பாளர்

வெற்றிபெற்ற சுப்புலட்சுமியிடம் பேசினோம். ``தொடர்ச்சியாக 4 -வது முறை கவுன்சிலராகத் தேர்வாகி இருப்பதில் மகிழ்ச்சி. எங்கள் குடும்பம் பாரம்பர்யமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறது. நாட்டின் முதல் பிரதமர் நேருவும், காமராஜரும் எங்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். அந்தப் பாரம்பர்யத்தில் வந்தவர் என்பதால், தொடர்ச்சியாக எனது வார்டு மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து நன்மதிப்பைப் பெற்றிருந்தேன். எங்கள் வார்டு மக்களின் இல்ல சுப, துக்க நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். தற்போது சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றுள்ளதைத் தொடர்ந்து மேலும் நல்ல பல திட்டங்களை மக்களுக்குச் செய்ய உள்ளேன்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism