புதுமனைவியை கழுத்து அறுத்துக் கொன்ற கணவன்: நெல்லை பயங்கரம்  | A lady murdered by her husband in nellai

வெளியிடப்பட்ட நேரம்: 12:43 (04/11/2016)

கடைசி தொடர்பு:13:28 (04/11/2016)

புதுமனைவியை கழுத்து அறுத்துக் கொன்ற கணவன்: நெல்லை பயங்கரம் 

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் குடும்பத் தகராறு காரணமாக கணவனே, மனைவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

கடையநல்லூர் ரகுமானியபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் அப்துல்காதர். இவரது மனைவி தஸ்லீமா. இன்று காலை அப்துல்காதர் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்குச் சென்றனர். அப்போது, அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியடைய வைத்தது. வீட்டின் அறையில் ரத்த வெள்ளத்தில் தஸ்லீமா சடலமாக கிடந்தார். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அப்துல்காதர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

தகவல் கிடைத்ததும் போலீஸார், அப்துல்காதரை ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வீட்டின் அறையில் டைல்ஸ்கள் உடைக்கப்பட்டு, குழி தோண்டப்பட்டிருந்தது. இதை பார்த்த போலீஸாருக்கு, சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

திருமணமான 4 மாதமே ஆன நிலையில் நடந்த இந்த சம்பவத்தால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆண்டனிராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க