வடகிழக்குப் பருவமழை: திருவாரூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருவாரூர் மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காவல்துறை  ஐ.ஜி. கருணாசாகர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கக் கூடிய 55 இடங்கள் கண்டறிப்பட்டன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக குறிப்பிட்ட இந்த 55 பகுதிகளைக் கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும்
மாவட்ட காவல்துறை சார்பில் 25 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஐ.ஜி. கருணாசாகர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி. வரதராஜீ, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

- ராம்


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!