இளம்பெண் மீது ஆசிட் வீச்சு: நெல்லை கொடூரம் | Teen severely injured with acid attack in nellai

வெளியிடப்பட்ட நேரம்: 11:48 (08/11/2016)

கடைசி தொடர்பு:12:20 (08/11/2016)

இளம்பெண் மீது ஆசிட் வீச்சு: நெல்லை கொடூரம்

நெல்லை அருகே ஒருதலை காதல் காரணமாக இளம்பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தில், ஒருதலைக் காதல் காரணமாக தனியார் செல்போன் கடையில் பணியாற்றி வந்த ராமலட்சுமி என்ற இளம் பெண் மீது, அதே பகுதியைச் சேர்ந்த சின்னராசு என்பவர்  விசிட்டை வீசிவிட்டு தப்பி ஓடி உள்ளார். இதனால், வலியால் கதறி துடித்த அவரை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில்  அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிய சின்னராசு என்பவரைத் தேடி வருகின்றனர். 

- ஆண்டனி ராஜ்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க