Published:Updated:

ஊராட்சி மன்றத் தலைவராக 72 வயது பாட்டி வெற்றி; ஆட்டம் பாட்டத்தோடு ஊர்வலம்!

ஊராட்சி மன்றத் தலைவராக 72 வயது பாட்டி

``தண்ணி, தெரு லைட்டு, சாக்கடை, ஆஸ்பத்திரி அப்படீனு அத்தியாவசிய தேவையில இருந்து எல்லாமே தேவைப்படுது. அது அத்தனையும் ஒண்ணு பாக்கியில்லாம செய்வேன் ராசா!” - பாப்பாத்தி பாட்டி

ஊராட்சி மன்றத் தலைவராக 72 வயது பாட்டி வெற்றி; ஆட்டம் பாட்டத்தோடு ஊர்வலம்!

``தண்ணி, தெரு லைட்டு, சாக்கடை, ஆஸ்பத்திரி அப்படீனு அத்தியாவசிய தேவையில இருந்து எல்லாமே தேவைப்படுது. அது அத்தனையும் ஒண்ணு பாக்கியில்லாம செய்வேன் ராசா!” - பாப்பாத்தி பாட்டி

Published:Updated:
ஊராட்சி மன்றத் தலைவராக 72 வயது பாட்டி

72 வயதில் கிராம ஊராட்சிமன்றத் தலைவராக வாகை சூடிய பாட்டியை வெடிவெடித்து ஆட்டம் பாட்டத்தோடு அழைத்து சென்ற சம்பவம் அரியலூரில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர்
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 9 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் ஜூலை 9-ம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையத்தால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில், நான்கு வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மீதமிருந்த வார்டுகளுக்கும், ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கும் கடந்த 9-ந் தேதி நடந்த இடைத்தேர்தலில், வாக்கு எண்ணும் பணிகள் நேற்று (12.7.2022) நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை
மாதிரி படம்

இதில், ரெட்டி பாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்குப் பாப்பாத்தி என்ற 72 வயது பாட்டியும், ராணி என்பவரும் போட்டியிட்டனர்.

இதில், முதல் சுற்றிலிருந்து முன்னணியிலேயே இருந்த பாட்டி பாப்பாத்தி, இறுதிச் சுற்றின் முடிவில் மொத்தம் 1,635 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை விட 808 வாக்குகள் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஊர்வலம்
ஊர்வலம்

இதனையடுத்து, அரியலூர் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அலுவலரிடம் வெற்றிச்சான்றிதழை பெற்றுக் கொண்ட பாப்பாத்தி பாட்டியை அவரின் உறவினர்களும் அக்கிராம மக்களும் மாலை அணிவித்து ஆட்டம் பாட்டத்தோடு ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

பாப்பாத்தி பாட்டியிடம், ‘ஊருக்கு என்ன செய்வீங்க பாட்டி..?’ எனக் கேட்டோம். “தண்ணி, தெரு லைட்டு, சாக்கடை, ஆஸ்பத்திரி அப்படீனு அத்தியாவசிய தேவையில இருந்து எல்லாமே தேவைப்படுது.

பாப்பாத்தி
பாப்பாத்தி

அது அத்தனையும் ஒண்ணு பாக்கியில்லாம செய்வேன் ராசா” என அவர் கூற, சுற்றியிருந்தவர்களின் கரகோசம் பார்ப்பவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.