கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு!

கோவை மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜன் - ஜோதி தம்பதியினருக்கு, கடந்த 8ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்று பிற்பகலில் அந்த குழந்தையின் தாய் ஜோதி, சற்று அசந்து தூங்கியிருக்கிறார். அப்போது மர்ம நபர்கள் தாயின் அரவணைப்பில் இருந்த, பிறந்து 2 நாட்களான குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர்.

தூக்கத்தில் இருந்து ஜோதி கண் விழித்ததும், குழந்தை இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடமும், போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது, ஒரு ஆணும், 3 பெண்களும் அந்த பெண் குழந்தையை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தையை கடத்திய அந்த 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கடத்தப்பட்ட பெண் குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். மேலும், வெள்ளக்கிணறில் பகுதியில் இருந்து குழந்தை மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தையை தற்போது கோவை அரசு பொதுமருத்துவமனைக்கு போலீசார் கொண்டு வந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!