மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்!  | Employment camp for medical assistant and driver work

வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (11/11/2016)

கடைசி தொடர்பு:17:55 (11/11/2016)

மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்! 

 


108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நாளை நடைபெறுகிறது.

பொது மக்களுக்காக 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் காலியாக உள்ள இடங்கள், தற்போது நிரப்பப்பட உள்ளன. அதன்படி மருத்துவ உதவியாளர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆகிய பணிகளுக்காக நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, சென்னை யூத் கமிஷன், ஆர்ச்டயோசின் பாஸ்டோரல் சென்டர், 25 - ரோசரி சர்ச் ரோடு, மயிலாப்பூர் என்ற முகவரியில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாக GVK EMRI நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பணிகளுக்கு 10 -ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், 23 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு B.Sc நர்சிங் அல்லது அதற்கு இணையான படிப்பு படித்திருக்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க