விசாலாட்சி மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் மனைவியுமான விசாலாட்சி நெடுஞ்செழியன் இறப்புக்கு, முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.


இது பற்றி அவர்,'விசாலாட்சி நெடுஞ்செழியனின் மறைவு அதிமுக-வுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.' என்று கூறியுள்ளார்.

விசாலாட்சி நெடுஞ்செழியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில், இன்று அவர் காலமானார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!