வெளியிடப்பட்ட நேரம்: 16:03 (15/11/2016)

கடைசி தொடர்பு:17:36 (15/11/2016)

ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயம் செய்ய குழு அமைப்பு

ஆம்னி பேருந்து கட்டணம் தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பண்டிகை காலங்களில் மிக அதிகளவு கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் ஆம்னி பேருந்து கட்டணம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பாட்ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் போக்குவரத்துத் துறை ஆணையர், நிதித்துறை இணைச் செயலாளர், சாலை போக்குவரத்துத் துறை இயக்குநர் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றிருப்பர்.

இந்த குழு ஏழு நாட்களில் பணிகளை தொடங்கி நான்கு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட 12 வாரங்களில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட ஆணையிட்டுள்ளது. ஆம்னி பேருந்து புகார் குறித்து தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க