வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (16/11/2016)

கடைசி தொடர்பு:11:51 (16/11/2016)

ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்ட ஜி.ராமகிருஷ்ணன் கைது

சென்னை ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.

பழைய நோட்டு அறிவிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. சென்னை பாரிமுனையில் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்று அருகில் உள்ள மண்டபத்தில் வைத்தனர்.

படங்கள்: ஆ.முத்துக்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க