திரைப்பட மேடை நடனக்கலைஞர்கள் வலியுறுத்தல்!

நலிந்து வரும் மேடை நடனக்கலைஞர்களின் வாழ்வாதார பிரச்னைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரைப்பட மேடை நடனக்கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அஜீத் ராஜா, "தமிழ் நாட்டில் மேடை நடனத்தை நம்பி லட்சக்கணக்கான குடும்பம் இருக்கிறது. ஆனால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது முறையான நடன நிகழ்ச்சி செய்பவர்களுக்கு அனுமதி கிடைப்பதில் பல புதிய நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது. ஆனால், கோயில் விழாக்களில் பல வெளி மாநில பெண்களை அழைத்து வந்து ஆபாச நடனம் ஆடுபவர்களுக்கு மட்டும் பல்வேறு இடங்களில் அனுமதி கிடைக்கிறது. இதனால், எங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கிபோய் உள்ளது.

பல இடைத்தரகர்கள் மூலம் நடத்தப்படும் நடன நிகழ்ச்சிகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட நடனக் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் நடன நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் நாங்கள் பல முறை காவல்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்துள்ளோம். இந்நிலையில், தற்போது மீண்டும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்குத் தடை என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது. மேலும், இதையே காரணம் காட்டி, காவல்துறையும் எங்களுக்கு வழக்கம்போல், அனுமதி மறுத்துவிடும். இதனால், எங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக கேள்விக்குறியாகி உள்ளது.

இதனால், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த நடன கலைஞர்கள் அனைவரும், குடும் அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை அந்தந்த மாவட்ட ஆட்சியாளரிடமே ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம். இதனால், நலிந்து வரும் மேடை நடனக்கலைஞர்களின் வாழ்வாதார பிரச்னைக்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!