ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்! | Rs 5 crore worth narcotics seized

வெளியிடப்பட்ட நேரம்: 20:16 (29/11/2016)

கடைசி தொடர்பு:11:16 (30/11/2016)

ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்!

 

சென்னையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மண்ணடியில் மலேசியாவுக்கு கடத்தவிருந்த 5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, போதைப் பொருளை கடத்த முயன்றதாக சிராஜ்தீன், சையத் முசாபர், சதீஷ், பாக்கியகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போதைப் பொருளை கண்டெய்னரில் கடத்த முயன்ற 4 பேரிடம் வருவாய் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போதை கடத்தல் வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க