வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (29/11/2016)

கடைசி தொடர்பு:11:00 (30/11/2016)

போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதிய முன்பணம்

பழைய நோட்டு வாபஸ் விவகாரத்தால், ஊதியத்தை ரொக்கமாக தர வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு நாளை சம்பளம் முன்பணமாக ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மீதம் உள்ள ஊதியம் வழக்கம் போல அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பணம் வழங்குவதால் 1.40 லட்சம் போக்குவரத்து ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. அதன்படி, எட்டு போக்குவரத்து கோட்டங்களில் ஊழியர்களுக்கு ஊதிய முன்பணம் வழங்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க