திருவாரூர் அருகே மேலும் ஒரு விவசாயி தற்கொலை |  farmer suicide near Thiruvarur

வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (30/11/2016)

கடைசி தொடர்பு:13:06 (30/11/2016)

திருவாரூர் அருகே மேலும் ஒரு விவசாயி தற்கொலை

திருவாரூர் அருகே சம்பா பயிர் கருகியதால் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருவாரூர் அருகே முசிறியம் கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான விவசாயி சேகர், சம்பா பயிர் கருகியதால் மனமுடைந்து கடந்த 24-ம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்துள்ள விவசாயி சேகருக்கு, 2 ஏக்கர் நிலமும் ஒரு ஏக்கர் குத்தகை நிலமும் உள்ளது. அதற்கு தேவையான உரம் மற்றும் இதர விவசாய பொருட்கள் வாங்குவதற்காக, தனது மனைவியுடைய நகைகளை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்துள்ளார். அதை திருப்புவதற்கான வழி தெரியாமலும், தண்ணீர் இன்றி விவசாயம் செய்ய முடியாமலும் மனமுடைந்து அவர் விஷம் அருந்தியுள்ளார் என அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். 

செய்தி, படம்: க.சதீஷ்குமார் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க