''அப்போலோ மர்மம் விலகுகிறது''- ரெட்டி சொன்ன தகவல்(வீடியோ)

அப்போலோ

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த மர்ம மேகங்கள் தற்போது மெல்ல விலக ஆரம்பித்துள்ளது. செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, 70 நாட்கள் கடந்து விட்டன. முதல்வருக்கு சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு என்று மட்டுமே சொல்லப்பட்ட நிலையில், இதயநோய் மருத்துவர்கள், சிறுநீரக மருத்துவர்கள், தொற்றுநோய் மருத்துவர்கள் என உலகப் புகழ்பெற்ற மருத்துவர்கள் பலரும் முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். லண்டனில் இருந்து ஐந்துமுறை சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்த ரிச்சர்ட் பெய்ல், தீபாவளிக்குப் பிறகு வராதது ஏன்? ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க புதிதாக வந்த வெளிநாட்டு மருத்துவர்கள் யார் யார்? சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்த அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி, ஒரு முக்கிய விஷயத்தைச் சொன்னார்.... அது, இதுவரை ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாக இதுவரை தெரிவிக்கப்பட்டு வந்த மர்மமான செய்திகளை உறுதிப்படுத்துவதாக இருந்தது.. அப்போலோ ரெட்டி சொன்ன அந்த விஷயம் என்ன?.. ஜெயலலிதாவுக்கு தற்போது பல ஃபிஸியோதெரபி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.. அந்த பயிற்சிகள் என்னென்ன? மருத்துவர்களுக்கும், சசிகலாவுக்கும் மாறுபட்ட கருத்து இருப்பதற்கு என்ன காரணம்? இவையனைத்துக்கும் விடைகள் கீழே உள்ள வீடியோவில்..

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!