அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் | Government hospital mistakenly injects different blood into a woman's body

வெளியிடப்பட்ட நேரம்: 17:54 (03/12/2016)

கடைசி தொடர்பு:17:56 (03/12/2016)

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

திருவாரூர் மாவட்டம் செருவண்டூரைச் சேர்ந்த கமலா என்பவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில், பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பம் ஆனதால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்துள்ளனர் மருத்துவர்கள்.

இந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு அவரது உடலில் ரத்தம் குறைவாக இருப்பதாக கூறியுள்ளனர் மருத்துவர்கள். கமலாவுக்கு பி நெகட்டிவ் ரத்தத்தை ஏற்றுவதற்குப் பதிலாக, பி பாஸிட்டிவ் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இதனால், கோமா நிலைக்குச் சென்றுள்ளார் கமலா. 

இது குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் கூறுகையில், 'அரசு மருத்துவமனையில் ரத்தம் மாற்றி ஏற்றியது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க