நாட்டில் 'எமர்ஜென்சி' நடக்கிறது- முன்னாள் நீதிபதி

மதுரையில் நடந்த ஒரு கருத்தரங்கில் பரபரப்பான கருத்துகளைக் கூறியுள்ளார் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்.

"நீதித்துறையில் ஊழல் இருக்கிறது என்று சொல்வது எப்படி குற்றமாகும்.? எல்லா துறையையும்போல் நீதித்துறையிலும் தவறுகள் நடக்குது. ஊழல் உள்ளது. இதை எதிர்த்து போராட்டம் செய்த வழக்கறிஞர்களுக்கு தடை விதிப்பது எந்த வகையில் நியாயம்?

அப்படியென்றால், ஜெ.என்.யூ மாணவர் தலைவர் கன்னையா குமாரை பாட்டியாலா கோர்ட்டுக்குள் வைத்து வக்கீல்கள் தாக்கினார்களே, அந்த வக்கீல்களுக்கு தொழில் செய்ய ஏன் தடை போடவில்லை, கேரளாவில் சமீபத்தில் பிரஸ்காரர்களை வக்கீல்கள் தாக்கினார்கள். அவர்கள் தொழில் செய்ய ஏன் தடை போடவில்லை. தமிழர்கள் என்றாலே நடவடிக்கைதானா?

நம் நாட்டில் தற்போது ஒவ்வொரு பகுதியிலும் எமர்ஜென்சி நடந்து கொண்டிருக்கிறது. நாட்டின் அனைத்து துறையிலும் தனக்கு ஆதரவானவர்களை நியமித்து வருகிறார்கள். இதை எதிர்த்து போராட வேண்டியது வழக்கறிஞர்களின் சமூக கடமையாகும். மக்களுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் வழக்கறிஞர்களை மிரட்ட இதுபோன்ற தடைகளை போடுகிறார்கள்." என மதுரை கருத்தரங்கில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேசியுள்ளார். 

- செ.சல்மான்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!