நடிகை ஸ்ரீப்ரியா பத்திரிகையாளர்களுக்கு வேண்டுகோள் | Actress Sripriya requests Journalist

வெளியிடப்பட்ட நேரம்: 19:04 (04/12/2016)

கடைசி தொடர்பு:19:06 (04/12/2016)

நடிகை ஸ்ரீப்ரியா பத்திரிகையாளர்களுக்கு வேண்டுகோள்

குடும்ப பிரச்னைகளை டிவி சேனல்களில் அலசும் நிகழ்ச்சிகளுக்கு எதிராக ட்வீட் செய்துள்ளார் ஸ்ரீப்ரியா. அவர் கடந்த வாரமே இந்த நிகழ்ச்சிகளைப் பற்றி பேசி இருந்த நிலையில், தற்போது,'பத்திரிகையாளர்களே, இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின் அதில் பங்கேற்றவர்களுக்கு என்ன ஆகிறது என்பதை ஆராயுங்கள்.' என்று ட்வீட் செய்துள்ளார்.

அவர் மேலும்,'தொழில் முறை உளவில் ஆலோசனை என்பது சிகிச்சை பெறுபவருக்கும் உளவியல் நிபுணருக்கு மத்தியில் தான் நடக்கும். கேமரா முன்பு நடக்காது. இதைப் போன்ற நிகழ்ச்சிகள் பற்றி விழிப்பு உணர்வு கொண்டு வந்து, தடை விதிக்க வேண்டும்.' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க