வெளியிடப்பட்ட நேரம்: 23:53 (04/12/2016)

கடைசி தொடர்பு:23:53 (04/12/2016)

கருணாநிதி வீட்டு முன் போலீஸ் குவிப்பு!

கருணாநிதி வீடு

தி.மு.க தலைவர் கருணாநிதி வீடு அமைந்துள்ள கோபாலபுரத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவரது வீட்டிற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வெளியான தகவல்களைத் தொடர்ந்து, எழுந்த பரபரப்பான நிலைமையைத் தொடர்ந்து, தி.மு.க தலைவர் கருணாநிதியின் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோபாலபுரத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் வீட்டிற்கும், சி.ஐ.டி காலனியில் உள்ள ராசாத்தி அம்மாள் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது

.

மேலும். தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கும், தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட தி.மு.க முக்கியத் தலைவர்களின் வீடுகளுக்கும் தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்