தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை: மத்திய அரசிடம் ஆளுநர் விளக்கம்

முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில், தற்போதைய நிலவரம் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ்-இடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுள்ளார். 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் இல்லை' என ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் 73 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரவியதால் நேற்றிரவு கடைகள், பெட்ரோல் பங்க் மூடப்பட்டது, பேருந்து நிலையங்கள் வெறிச்சோடியது. தமிழகம் முழுவதும் ஒரு பதற்றமான சூழல் உருவானது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவிடம் இன்று தொலைபேசியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். அப்போது, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு எதுவும் பாதிப்பில்லை என்று விளக்கம் அளித்தார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!