’தமிழக அரசு உதவி கேட்காமல், நாங்களாக தலையிட முடியாது’ - கிரண் ரிஜ்ஜு

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து பிரதமர் மோடியிடம்,  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா விளக்கியுள்ளார். இந்நிலையில், ’தமிழக அரசு கேட்டுக்கொண்டால் மத்திய அரசு உதவத் தயாராக உள்ளது’ என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு தரப்பில் உதவி கோராத பட்சத்தில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.  

சற்று முன் மத்திய உள்துறை அமைச்சர்,  ராஜ்நாத் சிங்கிடம், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் இல்லை' என விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!