Published:Updated:

`டெல்லி சென்றுவந்த 10 பேர்; தனிமைப்படுத்தப்பட்ட 742 நபர்கள்!' - நீலகிரி நிலவரம் #corona

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 732 பேர் கண்காணிப்பில் உள்ள நிலையில், டெல்லியில் நடந்த கருத்தரங்கிற்கு சென்று திரும்பிய 10 பேர் என மொத்தம் 742 பேரை வீட்டு தனிமையில் வைத்து கண்காணித்து வருகின்றனர்.

கேரளா மற்றும் கர்நாடகா மாநில எல்லையோரத்தில் அமைந்துள்ள நீலகிரியில் தற்போதுவரை யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

இந்த பெருந்தொற்றை தவிர்த்து மக்களை காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில் எந்த வெளிவாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. மாவட்டம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் இடைவிடாது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

மாவட்ட மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில் எந்த வெளி வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. மாவட்டம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் இடைவிடாது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல், சளி காய்ச்சலுடன் உள்ளவர்கள் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்கள் தொடர் கண்காணிப்பிலும் உள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று திரும்பிய 732 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு சென்று திரும்பிய 10 பேர் என தற்போது 742 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேசுகையில், "தற்போது ஊட்டி அரசு மருத்துவமனையில் நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குக் கொரோனா தொற்று இல்லை. எனினும், சளி, காய்ச்சல் உள்ளதால் அவர்களது ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 742 பேரை வீட்டு தனிமையில் கண்காணித்து வருகிறோம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் கிடைக்க தோட்டக்கலைத் துறை மற்றும் இதர துறைகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், வெளியூர்களில் இருந்து பொருட்களை ஏற்றிவரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணிக்குள் பொருட்களை இறக்கிவிட வேண்டும்.

அதேசமயம் பாரம் தூக்கும் தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும், கட்டாயம் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

உணவு பொருள்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க விருப்பம் உள்ள தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநரை தொடர்பு கொண்டு வழங்கலாம். புலம்பெயர்ந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பணியில் அமர்த்திய அந்தந்த நிறுவனங்களே தங்குவதற்கு மற்றும் உணவு ஆகியவைகளை வழங்க வேண்டும் " என்றார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு