வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (05/12/2016)

கடைசி தொடர்பு:14:11 (05/12/2016)

அப்போலோ மருத்துவர்களுக்கு நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் க்ரிட்டிக்கல் மெடிக்கல் கேர் வார்டில் (MDCCU) அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடயே, முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை புதிய அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டது. அதில், முதலமைச்சருக்கு மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் கருவிகளின் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அப்போலோ மருத்துவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். "மருத்துவமனை வளாகத்தில் அசாதரணமான சூழல் நிலவுவதால், பல்வேறு இடங்களில் உள்ள நமது மருத்துவமனைகளில் வைத்து உங்களுடையே நோயாளிகளை 3 நாட்கள் கவனித்துக்கொள்ளுங்கள்" என்று அப்போலோ மருத்துவர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க