மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மீண்டும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே கூறியதை அடுத்து, இன்று மாலை 6 மணி அளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!