அப்போலோவை அலற வைத்த 'அம்மா' கோஷம்

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அடுத்து இன்று மதியம் முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அப்போலோ மருத்துவமனை இன்று மதியம் புதிய அறிக்கையை வெளியிட்டது.

அப்போலோவிலிருந்து வரும் தகவல்களைப் பார்த்து மருத்துவமனையின் வெளியே காத்திருக்கும் தொண்டர்கள் கதறி அழுத வண்ணம் உள்ளனர். அம்மா எழுந்து வாருங்கள் என்று தொண்டர்கள் உருக்கமாக கதறினர். இந்த கதறல் சத்தம் கிரீம்ஸ் சாலையே பரபரப்பாக்கியது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு அங்கு குவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!