வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (06/12/2016)

கடைசி தொடர்பு:16:23 (06/12/2016)

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த அலையலையாய் திரண்டுவந்த மக்கள்!

           ஜெயலலிதா

மிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள், அவரின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹால் நோக்கி அலையலையாய் வந்தவண்ணம் உள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா நேற்று (திங்கள்) இரவு 11.30 மணிக்கு, அப்போலோ மருத்துவமனையில் காலமானார். அதனையடுத்து அங்கிருந்து அவரது உடல், அவரின் போயஸ் தோட்ட இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்டது. பின்னர், போயஸ் இல்லத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.அதனையடுத்து அதிகாலை 4.50 மணிக்கு போயஸ் இல்லத்தில் இருந்து ஜெ,வின்  உடல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

ராஜாஜி ஹாலில் தயராக வைக்கப்பட்டு இருந்த மேடையில் அவரின் வைக்கப்பட, அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தத் தொடங்கினர். அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தொடங்கியது.

              

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து அதிமுகவினரும்,பொதுமக்களும் ராஜாஜி ஹால் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். பஸ் போக்குவரத்து இல்லாததால், ஏராளமானோர் கார்களிலும், லாரிகளிலும்,வேன்களிலும் சென்னைக்கு வந்துகொண்டுள்ளனர். சென்னை அண்ணாசாலை எல்.ஐ.சி.தொடங்கி ராஜாஜி ஹால் வரை நடந்தே பல்லாயிரக்கணக்கானோர் ஜெ.,விற்கு நேரில் அஞ்சலி செலுத்துகிறார்கள். அதே போல,ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள எம்.ஜி.ஆர்.சமாதி அமைந்துள்ள மெரினா கடற்கரையிலும் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

             ஜெயலலிதா

மெரினா கடற்கரை, சிவானந்தா சாலை, அண்ணாலை, வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி,சேப்பாக்கம் ஆகிய பகுதிகள் அனைத்திலும் அஞ்சலி செலுத்த பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டதால், எங்குபார்த்தாலும் மக்கள் வெள்ளமாகக் காட்சியளிக்கிறது.

                                                       

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்