மின்துறை அமைச்சருக்கு தெரியாதா..? இந்த 'ஷாக்'..!

ஜெயலலிதா மறைவுக்காக நேற்று 6.12.2016 பொதுவிடுமுறை அளித்தது தமிழக அரசு. ஆனால் நேற்று செலுத்த வேண்டிய மின்கட்டணத்தை இன்று செலுத்த செல்கையில் மின்துறை அலுவலகங்கள் அபராத தொகை சேர்த்து வசூலிப்பதாக புகார் எழுந்திருக்கிறது.

இது பற்றி மின்துறை அதிகாரிகளிடம் பேசியபோது,'எங்களுக்கு எழுத்துபூர்வமாக எந்த உத்தரவும் வரவில்லை. ஆகையால், அபராதத்துடன் தான் இன்று மின் கட்டணத்தை வாங்குகின்றோம்' என்று கூறினர்.

இது பற்றி மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டபோது, 'எனக்கும் புகார்கள் வந்துள்ளன. அப்படி யாரும் அபராதம் வசூலிக்கக் கூடாது என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனே சொல்கிறேன்' என்றார்.

- மு.இராகவன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!