வெளியிடப்பட்ட நேரம்: 20:19 (07/12/2016)

கடைசி தொடர்பு:12:32 (08/12/2016)

ஜெயலலிதா சமாதி வரையில் தொடரும் அப்போலோ!

செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கி ஜெயலலிதா மரணம் வரையில் 75 நாட்களும் அப்போலோவை சுற்றியே அரசியல் அரங்கேறிக் கொண்டிருந்தது. தினமும் வி.ஐ.பி.கள் ஆஜர் என அப்போலோ, அரசியல் களமானது. ‘‘பேசுகிறார்... எழுந்து நடந்தார்... கிச்சடி சாப்பிட்டார்... காவிரிக்காக அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார்... கையெழுத்துப் போட்டு அறிக்கை விட்டார்’’ என அப்போலோவில் இருந்து வந்த செய்திகள் பல ரகம். உச்சபட்சமாக டிசம்பர் 4, 5 தேதிகளில் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக அப்போலோ மீது அகில இந்திய மீடியாவின் பார்வை குவிந்தது. டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது. ஆனால், ஜெயலலிதாவின் சமாதி வரையில் அது விடாது போல. ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் ஜெயலலிதாவின் சமாதியை சுற்றி பேரிகார்டுகளை அடுக்கி பாதுகாப்பு வளையத்தை போட்டிருந்தது போலீஸ். அந்த பேரிகார்டுகளில் ஒன்றில் அப்போலோ விளம்பரம்!


 - எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

-படம் தி.குமரகுருபரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க