வெளியிடப்பட்ட நேரம்: 14:09 (08/12/2016)

கடைசி தொடர்பு:14:23 (08/12/2016)

ஜெயலலிதாவின் மொத்த சொத்து மதிப்பு என்ன? #Verified

ஜெயலலிதா

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு என்ன என்பது தெரியுமா?

2016 சட்டமன்ற தேர்தலின் போது ஆர்.கே நகரில் போட்டியிட ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில் அவர் தெரிவித்திருந்த சொத்து விவரங்கள் இவைதான்.

ஜெயலலிதா மொத்த சொத்து மதிப்பு ரூ. 118 கோடியே 58 லட்சம்

அசையும் சொத்துகள்

அசையும் சொத்து என்ற வகையில் நகை, வாகனங்கள் போன்றவற்றின் மதிப்பு 41 கோடியே 63 லட்சத்து 55 ஆயிரத்து 395 ரூபாய்.

அசையா சொத்துகள்

நிலம், கட்டடம் போன்ற அசையா சொத்தின் மதிப்பு ரூ. 72 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 190 ரூபாய். அசையா சொத்தில் போயஸ் கார்டன், மந்தவெளி, தேனாம்பேட்டை, ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ள வணிக கட்டடங்களும் அடங்கும். இதைத்தவிர, காஞ்சிபுரம் மாவட்டத்திலும், ஹைதராபாத்திலும் 17.93 ஏக்கர் இருக்கிறது.

வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை ரூ. 10 கோடியே 63 லட்ச ரூபாய். இதில் இரண்டு கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கில் முடக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களில் முதலீடாக ரூ. 27 கோடியே 44 லட்ச ரூபாய் செய்யப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பில் முடக்கப்பட்ட தங்கம் 21280.30 கிராம். வெள்ளி பொருட்கள் 1250 கிலோ.

தனக்கு கடனாக 2 கோடியே 4 லட்சத்து 2 ஆயிரத்து 987 ரூபாய் உள்ளது என குறிப்பிட்டு இருக்கிறார்.

ஜெயலலிதா சொன்ன தகவலின்படி அவருக்கு சொந்தமாக ஒன்பது கார் உள்ளன. இதில் ஒரு அம்பாசிட்டர் கார் முப்பது வருடங்களுக்கு மேலாக வைத்திருக்கிறார்.

 

 

ஜெயலலிதா உயில் எதாவது எழுதி வைத்திருந்தாரா என்பது இதுவரை தெரியவில்லை. இதுபற்றி அவரது தொண்டர்கள் சிலரிடம் பேசியபோது, போயஸ் கார்டன் இல்லத்தை அவரது நினைவிடமாக்க போவதாக தெரிவித்தார். சிறுதாவூர் தோட்டத்தில் ஒரு மணி மண்டபமும் கட்ட அதிமுக உயர்மட்ட குழுவினர் ஆலோசனை செய்து வருகிறார்கள். 

உயில் எதுவும் இல்லாதபட்சத்தில் ஜெயலலிதாவின் 100கோடிக்கும் அதிகமான சொத்து கட்சிக்கு செல்லலாம். 

- சக்திவேல் முருகன்

 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க