ஜெயலலிதா சமாதியில் மகளுடன் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர்

ஜெயலலிதா சமாதியில் நான் அஞ்சலி செலுத்தியபோது சூரியஒளி மூலம் என்னை அவர் ஆசீர்வதித்தார் என்கிறார் நடிகர் விஜய்கார்த்திக்.

ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது உடல் எம்.ஜி.ஆர் சமாதி அருகே 6-ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. அவரது சமாதியில் தினந்தோறும் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டிசம்பர் 7-ம் தேதி அதிகாலை நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் திடீரென வந்து அஞ்சலி செலுத்தினார். அதுபோல இன்றும் அதிகாலை நேரத்தில் நடிகர் விஜய்கார்த்திக், தன்னுடைய மகள் பாபினிஆயிஷாவுடன் ஜெயலலிதா சமாதிக்கு சென்றார். அவரைப்பார்த்ததும் பாதுகாப்பிலிருந்த போலீஸார், சமாதியின் அருகே அழைத்துச் சென்றனர். அங்கு 15 நிமிடம் அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்போது அவரும், அவரது மகளும் கறுப்பு உடை அணிந்திருந்தனர்.

இதுகுறித்து ஜெ.எம். பஷீர் என்ற விஜய்கார்த்திக் கூறுகையில், "தினமும் ஜெயலலிதாவின் புகைப்படம் அல்லது போயஸ் கார்டன் வீடு முன்பு சென்று வணங்கிய பிறகே அன்றாடப் பணிகளை செய்வேன். தற்போது ஜெயலலிதா இல்லை. இதனால் இன்று அவரது சமாதிக்கு சென்று வணங்கினேன். அப்போது சூரியஓளி என்மீது பட்டது ஜெயலலிதாவே என்னை ஆசீர்வதித்தது போல உணர்ந்தேன்" என்றார் கண்ணீர்மல்க.

எஸ்.மகேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!