'சின்னம்மா' இல்ல... சின்ன 'அம்மா'

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி இரவு காலமானார். அவரது மறைவை தொண்டர்களால் ஜீரணிக்க முடியவில்லை. மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் மறைவால் துயரத்தில் இருக்கும் சில தொண்டர்கள், கட்சியின் அடுத்த பொதுச்செயலாளராக சசிகலாவை ஏற்க மறுத்து வருகின்றனர். சில தொண்டர்கள், அம்மாவிடம் நீண்டகாலம் இருந்ததால் சசிகலாவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறிவருகின்றனர். 

இதனிடையே, 'சின்னம்மா' அவர்களே 2 கோடி கழக தொண்டர்களை வழி நடத்த வாருங்கள் என்றும், புரட்சித் தலைவியின் புகழ் மற்றும் தனது குடும்ப வாழ்க்கையை தியாகம் செய்து புரட்சித் தலைவிக்காகவே வாழ்த்த 'சின்ன அம்மா'வின் தியாகம் என்றென்றும் சரித்திரத்தில் நிலைத்திருக்கும் என்று அதிமுகவினரால் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்றைய தமிழ் நாளிதழ் ஒன்றில் 'புரட்சி தலைவி அம்மா அவர்களின் விசுவாச தொண்டனின் மனசாட்சி' என்ற தலைப்பில் வெளியான விளம்பரம் இது. அடிமட்ட தொண்டர்களிடையே சசிகலாவின் ஆதரவை உருவாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையாக இதை மக்கள் பார்க்கிறார்கள். சமூக வலைதளங்களிலும் சசிகலா தரப்பினரின் 'பிராண்டிங்' பலமாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!