கருணாநிதியை அடுத்தடுத்து சந்தித்த ஸ்டாலின், அழகிரி

திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகன்களான மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி அடுத்தடுத்து சந்தித்து பேசினர்.

திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கடந்த 1ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி. தீவிர சிகிச்சைக்கு பின்னர் கடந்த 7ஆம் தேதி வீடு திரும்பினார் கருணாநிதி.

இந்த நிலையில், "கலைஞர் மேலும் சில நாட்களுக்கு ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், அதுவரை “நோய்த்தொற்று”க்கு ஆளாகாமல் மிகவும் எச்சரிக்கையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டுமென்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். எனவே கலைஞரை பார்க்க நேரில் வருவதைத் கழகத் தோழர்களும், நண்பர்களும் முழுமையாகவும், கண்டிப்பாகவும் தவிர்க்க வேண்டும்" என்று திமுக தலைமைக் கழகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்த நிலையில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து மு.க.அழகிரி, கருணாநிதியை சந்தித்து பேசினார். அப்போது, அவரது உடல் நலம் குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. மேலும், துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு ஆகியோருடன் கருணாநிதியை சந்தித்து பேசினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!