ஜெ. சமாதியை வணங்கி அமைச்சரவை கூட்டம் நடத்தினார் முதல்வர் ஓபிஎஸ்

அமைச்சர்களுடன் சென்று ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார்.

மெரினாவில் எம்ஜிஆர் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதா சமாதிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று காலை வந்தனர்.

சமாதிக்கு மலர் தூவி அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஓபிஎஸ், மண்டியிட்டு வணங்கி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். சிறிது நேரம் அங்கிருந்த முதல்வர், அமைச்சர்கள் பின்னர் காரில் தலைமைச் செயலகம் சென்றனர்.

அங்கு முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது மற்றும் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 11.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் நண்பகல் 12.20 மணி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அமைச்சரவை கூட்டம் மீண்டும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி மசோதா குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னதாக போயஸ் தோட்ட இல்லத்தில் முதலமைச்சர் ஓ.பி.எஸ், அமைச்சர்கள் மற்றும் சசிகலா ஆகியோர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

படங்கள்: அசோக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!