#Vardah புயல் பாதிப்பு: சீரமைப்பு பணிகள் தீவிரம்

வர்தா புயல்.. சென்னையில் வேரோட சாய்ந்த மரங்கள்.. மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

மின் விநியோகம் இன்று (டிசம்பர் 13) மாலைக்குள் வழங்க நடவடிக்கை

‘வர்தா’ புயல் பாதித்த பகுதிகளில் 6000-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகத்தை விரைவில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதிகாரிகளும் மின் வாரிய பணியாளர்களும் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தி சாலைகளை சீரமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
 

விமான சேவை தொடங்கியது

புயல் கரையைக் கடந்தது. விமான சேவை தொடங்கியது. ரயில் பதைகள் சீரமைத்த பிறகு, ரயில் சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்து கிடந்த மரங்கள் விடிய விடிய அகற்றப்பட்டன.  சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்றும் (டிசம்பர் 13)  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. புயல் கரையைக் கடந்தாலும் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இரவு 9.00 புயல் பாதிப்பு: முதல்வர் பன்னீர் செல்வம் ஆய்வு

வர்தா புயல் கரையைக் கடந்துவிட்டது. இந்நிலையில் வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். எண்ணூர் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் அவர் ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் பணீந்திர ரெட்டி, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோரும் புயலால் பாதிப்பட்ட பகுதிகளில் நடக்கும் மீட்பு பணிகள், நிவாரண முகாம்கள் குறித்து வெவ்வேறு பகுதிகளில் ஆய்வு செய்துள்ளனர்.

மாலை 7.30 சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வர்தா புயல் பாதிப்பால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிலாது நபியை முன்னிட்டு நாளை ஏற்கெனவே அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வர்தா புயல் காரணமாக நாளை மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 7.15: பேருந்து சேவை தொடங்கியது!

வெளியூருக்கு செல்வதற்கான பேருந்து சேவை தொடங்கியது. கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் இரவு 7 மணி முதல் இயக்கப்படுகின்றன. கிழக்கு கடற்கரை சாலை, ஜி.எஸ்.டி. சாலை வழியாக வெளியூர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வர்தா புயல் காரணமாக காலை முதல் கோயம்பேட்டில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

மாலை 6.30: வர்தா புயல் கரையை கடந்தது: வட தமிழகத்தில் மழை பெய்யும்

சென்னை அருகே அதிதீவிர புயல் வர்தா கரையை கடந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வர்தா புயல் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்

மாலை:5.40 வர்தா புயலின் மையப் பகுதி கடந்தது: 6.30க்கு முழுவதும் கடக்கும்!

மாலை 6.30 மணிக்கு வர்தா புயல் கரையை முழுவதும் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இது குறித்து வானிலை தெரிவித்துள்ள தகவலில் சென்னை துறைமுகம் அருகே புயலின் மையப் பகுதி கடந்தது. புயலின் கிழக்கு பகுதி கடந்து வருகிறது. மணிக்கு 90.கி.மீ வரை காற்று வீசும். ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து மரக்காணம் வரை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

வர்தா புயலின் தாக்கம் - புகைப்படத் தொகுப்பு க்ளிக் செய்க...

 

விமான நிலையம் இரவு 8 மணி வரை மூடல்!

சென்னை விமான நிலையம் இரவு 8 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு, வெளிநாட்டு முனையங்கள் சேதமடைந்ததால் நடவடிக்கை இந்த நடவடிக்கை, சேதங்களை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் தெரிவித்துள்ளார்

சென்னை புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வரிடம் கேட்டறிந்தார் ராஜ்நாத் சிங்

முதலமைச்சர் ஓ.பன்னீர்செவத்திடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் ராஜ்நாத் சிங். அப்போது முதல்வர்' அரசு இயந்திரம் முழுவீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக  முதல்வர் கூறினார். மேலும் நிவாரணப் பணிகளை கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

மாலை 4.30 தயார் நிலையில் மின்சார பணியாளர்கள்: மின்துறை அமைச்சர் தங்கமணி

3,000 மின்சார பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். இரவுக்குள் மின்சார சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புயலின் வேகம் குறைந்த பின்னர் சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்படும்.

மாலை 4.00 புயலின் மையப்பகுதி தற்போது கரையை கடக்கிறது!

வர்தா புயலின் மையப்பகுதி கரையைக் கடந்ததும் காற்றின் வேகம் அதிகரிக்கும். அதன் பின் சென்னையில் 3 மணி நேரத்துக்கு கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மாலை 3.30: 192 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது - டெல்லியைச் சேர்ந்த இந்திய வானிலை மையம் தகவல்.

சென்னையை புரட்டிப் போட்ட வர்தா.. மேலும் படங்களுக்கு...


 

மாலை 3.10:  மாலை 5.30 மணியளவில் வர்தா புயல் வலுவிழக்கக் கூடும்

புயலின் பிற்பகுதி கரையைக் கடக்கும் போது 80-100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.
இன்று இரவு 11.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

பிற்பகல்: 2.55  ‘வர்தா’ புயல் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காற்றின் வேகம் தற்போது குறைந்துள்ளது.

ஏராளமான மரங்கள் சாய்ந்தன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சென்னை, திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரத்தில் 7 பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

 

 

பிற்பகல் : 1.35 ‘வர்தா’ புயலின் தாக்கம் இரவு 7 மணிவரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 108 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகின்றது. புயலின் மையப்பகுதி 3.30 மணிக்கு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பிற்பகல் : 1.20 சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை

 

 

வாட்ஸ் அப் பகிர்வு வீடியோ

புயல் கரையை கடப்பதால் சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்கிறது

மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசி வருகிறது

மதியம்: 12.50 : சென்னை மக்களுக்கு அறிவுரை

சென்னை மக்கள் பிற்பகல் 1 மணி முதல் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்

பிற்பகல் 4 மணி வரை மறுஅறிவிப்பு வரும் வரை வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

மதியம் 12.15: முதலைமைச்சர் ஆலோசனை

புயல் கரையைக் கடக்கும் நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை

பகல் 12.00 கரையை கடக்க தொடங்கியது!

சென்னை அருகே வர்தா புயல் கரையை கடக்க தொடங்கியது. செயற்கைக்கோள் புகைப்பட தகவலின்படி புயல் கரையை கடந்து வருகிறது. வர்தா புயல் முழுவதுமாக கரையைக் கடக்க சில மணி நேரம் ஆகும்

காலை 11.50 புயல் காற்று மரங்கள் விழுந்தன; போக்குவரத்து பாதிப்பு

சென்னையில் பல்வேறு பகுதியில் பலத்த காற்றுக்கு 100க்கு மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளன.

நேப்பியர்பாலம் காமராஜர் சாலையில் 4 மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து மாற்றம். ஜி.என்.செட்டி சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு. பலத்த காற்று வீசுவதால் எண்ணூர் பகுதியில் மரங்கள் விழுந்துள்ளன.

 

காலை 11.20: புறநகர் ரயில்சேவை ரத்து

மோசமான வானிலை காரணமாக புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

சென்னை - கடற்கரை - வேளச்சேரி இடையே புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது

தாம்பரம் - சென்னை கடற்கரை வரையிலான மின்சார ரயில்கள் நிறுத்தம்

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையேயும் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது

 காலை: 11.05  சென்னைக்குக் கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.

காலை: 10.40 சென்னை விமான நிலையத்தில் விமான சேவை முற்றிலுமாக பாதிப்பு

தற்போது சென்னைக்குக் கிழக்கே 87 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது, இன்னும் சில மணி நேரத்தில் பழவேற்காடு அருகே  கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வர்தா புயலின் காற்று வேகம் (கி.மீ/மணி)

 

 

மழை (மி.மீ)

 

 

காலை: 9.45 பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கடல் சீற்றம் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.. அதில்:-

* தாழ்வான பகுதியில் வசிப்போர் மேடான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தல்

* மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம்

* மின்கம்பங்கள், மின்சார பெட்டிகளின் அருகில் செல்ல வேண்டாம்

* மரங்களின் கீழ் வாகனங்களை நிறுத்துவோ, தங்கவோ வேண்டாம்

* மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மெழுகுவத்தி வாங்கி வைத்துக்கொள்ளவும்

* மருத்துவமனைகளில் மின்ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்

தொலைக்காட்சி, ரேடியாவை தொடர்ந்து கவனித்து காலநிலை அறிவிப்பை அறிந்துகொள்ள வேண்டும். சமைக்காமல், உண்ணக்கூடிய பிரட், பிஸ்கட், பழங்களை தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். குழந்தைகள், முதியோர்களுக்கு தேவைப்படும் உணவுப் பொருளை இருப்பு வைக்க வேண்டும்

 

காலை: 9.30: கனமழைக்கு வாய்ப்பு!

வடகடலோர தமிழக பகுதி, புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 20 செ.மீக்கு மேல் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

காலை 9.00: புயலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கை குறித்து அமைச்சர் உதயகுமார் ஆய்வு

சென்னையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் உதயகுமார் ஆய்வு செய்தார். பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்

காலை: 8.50 வர்தா புயல் தீவிர புயலாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

வர்தாபுயல் கரையை கடக்கும் போது 100 முதல் 120 கி.மீ வரை காற்று வீசக்கூடும். இன்று பிற்பகல் சென்னைக்கு அருகே வர்தா புயல் கரையை கடக்கிறது.

மணிக்கு 13.கி.மீ. வேகத்தில் வர்தா புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில்

வர்தா புயல் எதிரொலியால் ரயில் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக நாள் ஒன்றுக்கு 42 ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும். மேலும், மெட்ரோ ரயில் போக்குவரத்தில் பாதிப்பு இருக்காது என கூறப்பட்டுள்ளது.

 

விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரயில்கள் கூடூரிலேயே நிறுத்தப்படும். சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் கூடூரில் இருந்து இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

உதவி எண்கள்!

இந்நிலையில் வர்தா புயல் தொடர்பாக, உதவிக்கு எண்களை சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது.

044-25619206, 25619511, 25384965, 25383694, 25367823, 25387570.

வாட்ஸ் அப் எண்கள் 9445477207, 9445477203, 9445477206, 9445477201, 99445477205.

மின்னஞ்சல் முகவரி gccdm1@chennaicorporation.gov.in, gccdm2@chennaicorporation.gov.in, gccdm3@chennaicorporation.gov.in, gccdm4@chennaicorporation.gov.in, gccdm5@chennaicorporation.gov.in,  இவைகளை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், 1070 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

வர்தா புயல் பணிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வர்தா புயல் தொடர்பாக தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். புயல் தொடர்பான பணிகளை கண்காணிக்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் மேடான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாக பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெறிச்சோடி இருக்கும் பெருங்குளத்தூர்- தாம்பரம் நெடுஞ்சாலை...

 

ராணுவம், கப்பல்படை, விமானப்படை ஆகியவைகள் உயர் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேவைப்படும் நேரத்தில் அவர்கள் பயன்படுத்தப்படுவார்கள். பலத்த காற்று வீசும் போது மரம் விழுதல், மின் கம்பிகள் அறுந்து விழுதல் மற்றும் சாலைகளில் தேங்கும் தண்ணீர்களை வெளியேற்ற பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு தேவைப்படும் மருந்துகள், சுகாதார ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தனியார் மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் உள்ளிட்ட கருவிகளை பாதுகாப்பாக வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு பால் வினியோகத்தை தட்டுப்பாடின்றி வழங்க ஆவினுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதே போல் பொது மக்கள் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில், கனமழை பெய்யும் நேரத்தில் வெளியில் வர வேண்டாம். உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மழை பெய்யும் போது இருசக்கர வாகனம் மற்று கார் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். ஆபத்தான நேரத்தில் மக்கள் அருகில் உள்ள நிவாரண மையங்களுக்கு செல்ல வேண்டும்.

மேலும், மின்சார வாரியம், போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை ஆகிய துறையினரும் தாங்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்"என கூறப்பட்டுள்ளது. 

காலை: 6.20 சென்னைக்கு அருகே இன்று மதியம் வர்தா புயல் கரையைக் கடக்கும். அதற்குமுன்பு கொஞ்சம் வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை ஐந்து மணி முதல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. காலை ஒன்பது மணிக்கு மேல் மழை மற்றும் காற்று இரண்டுமே வலுவடையும்.  புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு சுமார் 100 கிமீ வேகத்தில் காற்று அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!