வெளியிடப்பட்ட நேரம்: 08:48 (12/12/2016)

கடைசி தொடர்பு:10:42 (12/12/2016)

வர்தா புயல் எதிரொலி: ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில்

வர்தா புயல் எதிரொலியால் ரயில் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக நாள் ஒன்றுக்கு 42 ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும். மேலும், மெட்ரோ ரயில் போக்குவரத்தில் பாதிப்பு இருக்காது என கூறப்பட்டுள்ளது.

விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரயில்கள் கூடூரிலேயே நிறுத்தப்படும். சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் கூடூரில் இருந்து இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க