வெளியிடப்பட்ட நேரம்: 14:33 (12/12/2016)

கடைசி தொடர்பு:14:43 (12/12/2016)

வர்தா மையப்பகுதி 3.30 மணிக்கு கரையைக் கடக்கும்

வர்தா புயல் கரையைக் கடக்கத் துவங்கியுள்ளதால் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீட்பு பணி முன் ஏற்பாடுகள் குறித்து, அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் வர்தா புயலின் மையப் பகுதி மதியம் 3.30 மணி அளவுக்கு கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், புயல் கரையைக் கடந்த பின்பும் 12 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இரவு 7 மணி வரை ‘வர்தா’ புயலின் பாதிப்பு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போதைய சூழலுக்கு மணிக்கு 108 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க