இரவுக்குள் சென்னையில் மின் விநியோகம்-அமைச்சர் தங்கமணி | Power supply to Chennai by tonight, says minister Thangamani

வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (12/12/2016)

கடைசி தொடர்பு:16:55 (12/12/2016)

இரவுக்குள் சென்னையில் மின் விநியோகம்-அமைச்சர் தங்கமணி

வர்தா புயலுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இரவுக்குள் சென்னையில் மின் விநியோகம் மீண்டும் கொடுக்கப்படும் என்று தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி,'வர்தா புயலால் கிட்டத்தட்ட 3,000 மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. புயலின் சீற்றம் குறைந்தவுடன் மின் கம்பங்களை சீரமைக்கும் பணி போர்கால அடிப்படையில் நடைபெறும். அதே போல, மின் துறை ஊழியர்கள் சேவைக்காக தயார் நிலையில் உள்ளனர். இன்று இரவிலிருந்தே சென்னையில் மின் விநியோகம் மீண்டும் கொடுக்கப்படும். நாளை மாலைக்குள் நிலைமையை சீராக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.' என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க