#Alert - இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் | #Vardah - Rains to continue on tuesday

வெளியிடப்பட்ட நேரம்: 08:19 (13/12/2016)

கடைசி தொடர்பு:10:25 (13/12/2016)

#Alert - இன்று அநேக இடங்களில் மழை பெய்யும்

வர்தா புயல் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளது. அனைவர் மனதிலும் இருக்கும் ஒரு கேள்வி, புயல் கரையைக் கடந்தபின், இன்றும் (செவ்வாய்க்கிழமை) மழை பெய்யுமா என்பதுதான். 

'புயல் கரையை கடந்தாலும் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். படிப்படியாக மழையின் அளவு குறையும்.' என சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க