வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (14/12/2016)

கடைசி தொடர்பு:12:43 (14/12/2016)

பேரறிவாளன் வழக்கில் சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆவணங்களை ஒப்படைக்கக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவுக்குப் பதில் அளிக்க சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ராஜீவ்காந்தி வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆவணங்களை சிபிஐ ஒப்படைக்க வேண்டும் என்றும், கூடுதல் விசாரணைக்காக அமைத்த குழு செயல்பாட்டை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்றும் பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க