மார்கழி மாத திருவிளக்கு வழிபாடு!

மார்கழி மாதம் இன்று துவங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதுமே பெரும்பாலான இடங்களில் பெண்கள் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோயிலில், ஆண்டு தோறும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை திருவிளக்கு பூஜை நடைபெறும்.

அதன்படி, இந்த ஆண்டும் மார்கழி முதல் நாளான இன்று அதிகாலை 5:30 மணியளவில் பெண் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

 - வீ. சிவக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!