'டிராஃபிக்’ ராமசாமி மருத்துவமனையில் அனுமதி

 

உடல் நலம் பாதிக்கப்பட்டு சமூக ஆர்வலர் 'டிராஃபிக்’ ராமசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

83-வயதிலும், தமிழக அரசியலில் ஆளும் கட்சிக்கு சிம்ம சொப்பனமாக திகழும் சமூக ஆர்வலர் 'டிராஃபிக்’ ராமசாமி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தானே முன்வந்து தாக்கல் செய்து, பல்வேறு பொதுநல சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சென்ற 'டிராஃபிக்’ ராமசாமி, நீதிமன்ற வளாகத்திலேயே திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். 

இதனையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வெங்கடேஷ்வரா மருத்துவமனையில் அவர் அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டார். நேற்று முழுவதும் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இதய பகுதியில் ஏற்பட்ட சிறு பிரச்னை மற்றும் டென்சன் காரணமாக  'டிராஃபிக்’ ராமசாமிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

-ரா.வளன்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!