'இது நடக்கும்'- அ.தி.மு.க.வினரை அலர்ட் செய்யும் விஜயசாந்தி

"கட்சியைப் பிரிக்க சில சதிகள் நடக்கும், அதிமுகவினர் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்" என ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகை விஜயசாந்தி இவ்வாறு கூறினார்.

கடந்த 5-ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியும், மொட்டை அடித்தும் வருகின்றனர்.

ஜெயலலிதா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நடிகர், நடிகைகள் மெரினாவில் உள்ள அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் அஜித் குமார் தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகை த்ரிஷா, நடிகர் விஜய் கார்த்திக் உள்ளிட்டவர்கள் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், நடிகை விஜயசாந்தி இன்று பிற்பகல் மெரினா கடற்கரைக்கு வந்தார். அங்குள்ள ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் அதிமுக கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், கட்சியைப் பிரிக்க சில சதிகள் நடக்கும் என்றும், அதிமுகவினர் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார். 

படம்: தி.குமரகுருபரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!