மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

அரியலூர் அருகே மதிய உணவு சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூா் குணமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனா். இந்நிலையில், பள்ளியில் 86 மாணவ மாணவிகள் இன்று மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது ஒரு மாணவனின் சாப்பாட்டில், பல்லியின் வால் கிடந்ததை பார்த்து, சத்துணவு ஆயாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மாணவர்கள் யாரும் சாப்பிடவேண்டாம் என அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே ஏற்கனவே சாப்பிட்டுக்கொண்டிருந்த 7 மாணவர்கள், 4 மாணவிகள் என மொத்தம் 11 பேர் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பிறகு மாணவர்கள் அனைவரும் தற்போது உடல் நலம் தேறி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!