மேலும் ஆறு மாதங்களுக்கு குடும்ப அட்டைகளில் உள்தாள்

தமிழகத்தில் பெரும்பாலான குடும்ப அட்டைகள் கடந்த 2009-ம் ஆண்டே காலாவதியாகி விட்டன. இந்நிலையில் குடும்ப அட்டையில், ஆதார் விபரங்களை இணைக்கும் பணிகள் இன்னும் நிறைவடையாததால், அடுத்த 6 மாதத்திற்காக (2017) குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டப்படும் என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. தற்போதுவரை 47 சதவீத குடும்பங்களில் உள்ள அனைவரது ஆதார் விபரங்களும் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை உருவாக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!